
மலாக்கா , பிப் 5 – மலாக்கா சிம்பாங் அம்பாட் (Simpang empat) , அலோர்காஜா
ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்தின் 2ஆவது கும்பாபிஷேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2 ஆம் தேதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாவது திருப்பணி வேலைகளுடன் புதிய ராஜகோபுரம் அமைத்து திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்தி பெருவிழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பத்தி பரவசத்தோடு கலந்து கொண்டனர்.
காலை மணி 9.20 முதல் காலை 10 மணிவரை நூதன ராஜகோபுரம், பிரதான திரிதள சுந்தர விமான கலசம் மற்றும் பரிவார ஆலய ஸ்தூபி கலசங்கள், ஏக காலத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ மூகாம்பிகைக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
மலாக்க சுப்ரமணியர் துரௌபதி அம்மன் ஆலாயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ P. D சிவச்சாரியார் சண்முகம் , ஸ்ரீ மூகாம்பிகை ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ ஜெகன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் சுமார் 30 குருமார்கள் இந்த கும்பாபிஷேகத்தை மிகவும் சிறப்பாக நடத்தினர்.
இந்த நிகழ்வில் மலாக்கா முதலமைச்சரின் பிரதிநிதியாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ வி.பி சண்முகம் , பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு இந்திய அதிகாரி சண்முகம் மூக்கன் , நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் , கோத்தா மலாக்க நாடாளுமன்ற உறுப்பினர் Khoo poay Tiong, ஓம்ஸ் தியாகராஜன் , பாத்தேக் ஏர் நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ சந்திரன் ராமமூர்த்தி (Datuk Chandran Ramamurthy) , டத்தோ பெரியசாமி உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகேஸ்வர பூஜைக்குப் பின் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.