
கோலாலாம்பூர், டிசம்பர்-3,
நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா, டுரியான் துங்காலில் 3 ஆடவர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, புக்கிட் அமானே விசாரிக்க வேண்டுமென அவர்களின் குடும்பத்தார் கோரியுள்ளனர்.
‘சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பான’ கொலைகளை இச்சம்பவம் உள்ளடக்கியது என அவர்கள் வாதிடுகின்றனர்.
அதற்கு ஆதாரமாக, சம்பவத்தின் போது பதிவுச் செய்யப்பட்டதாக நம்பப்படும் 13 நிமிட குரல் பதிவை ஆகமம் அணி மலேசியாவைச் சேர்ந்தவரான அருண் துரைசாமி இன்று வெளியிட்டார்.
அதில்,கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜி. லோகேஸ்வரன் தனது மனைவிக்கு கைப்பேசியில் அழைத்துப்பேசிய விஷயம், போலீஸார் கூறியவற்றுடன் முரண்படுவதாக அருண் சுட்டிக் காட்டினார்…
21 வயது எம். புஸ்பநாதன் , 24 வயது டி. பூவனேஸ்வரன், 29 வயது ஜி. லோகேஸ்வரன் ஆகிய மூவரும், போலீஸ் அதிகாரிகளை கத்தியால் தாக்கிய தொடர் குற்றவாளிகள் என்றும், 2024 முதல் 20 கொள்ளைகளில் ஈடுபட்டதாகவும், அவற்றால் RM1.3 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
எனவே, புக்கிட் அமான் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கை விசாரித்து, சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று அக்குடும்பங்கள் சார்பில் அருண் வலியுறுத்தினார்.
தற்காப்பு வாதங்கள் அடங்கிய அறிக்கைகளை போலியாக்கியதாகக் கூறப்படும் அதிகாரிகளும் அடவர்களில் அடங்குவர்.
முன்னதாக, இந்த DT கும்பலைச் சேர்ந்த 3 சந்தேக நபர்களும் ஒரு போலீஸ் அதிகாரியை பாராங் கத்தியால் தாக்கி படுகாயம் விளைவித்ததாகவும், போலீஸார் வேறு வழியின்றி தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மலாkகா போலீஸ் கூறியிருந்தது.



