கோலாலம்பூர், நவ 27 – மலேசியாவில் புதிய mpox clade II நோய் திங்களன்று பதிவாகியுள்ளது, இதன்வழி நாட்டில் இந்நோய்க்குள் உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாக ஆகியிருக்கிறது .
கடந்த 21 நாட்களுக்குள் அனைத்துலக பயண வரலாற்றைக் கொண்ட 34 வயதான மலேசியர் ஒருவர் அண்மையில் இந்நோயின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அந்த நோயாளி தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அந்த நோயாளி நவம்பர் 15ஆம் தேதியன்று கைகள், உடல் மற்றும் கால்களில் அரிப்புக்கான அறிகுறிகளை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து 23 ஆம் தேதி அவர் மருத்துவ சிகிச்சையை நாடினார்.
அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு Mpox நோய்க்கான அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டது. ஒருவருக்கு Mpox clade II இருப்பதை செப்டம்பர் 16ஆம் தேதி சுகாதார உறுதிப்படுத்தியது.