
கோலாலம்பூர், பிப்ரவரி-5 – டிசம்பர் 31 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 1,793 குடும்பங்களில் 7,332 பேர் மிகவும் வறுமையில் வாடுவதாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தஃபா கூறியுள்ளார்.
தேசிய வறுமை தரவுத்தளமான eKasih-வின் புள்ளிவிவரப்படி, ஆக அதிகமாக கோலாலம்பூரில் 1,737 பேரைக் கொண்ட 507 குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.
இது நவம்பரில் கோலாலம்பூரில் பதிவான 474 குடும்பங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகும்.
இருப்பினும், நாடு முழுவதும் மிகவும் வறுமையில் வாடும் மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 2,191-ரிலிருந்து குறைந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் கெடா உள்ளது; அங்கு மொத்தம் 1,227 பேர் மிகவும் வறுமையில் வாடுகின்றனர்;
அடுத்தடுத்த இடங்களில் ஜோகூரில் 910 பேரும், சிலாங்கூரில் 784 பேரும், திரங்கானுவில் 735 பேரும் வறுமையில் வாடுகின்றனர்.
எனினும், மலாக்கா, நெகிரி செம்பிலான், பெர்லிஸ் மற்றும் புத்ராஜெயாவில் மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்கள் எதுவும் இல்லை என Dr சாலிஹா கூறினார்.
eKasih தரவு தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதாக மக்களவைக்கு வழங்கிய எழுத்துப்பூர்வ பதிலில் அவர் கூறினார்.