மாஸ்கோ , டிச 24 – பெலாருஸ் ( Belarus ), பொலிவியா (Bolivia) , இந்தோனேசியா, கஜகஸ்தான் (Kazakhstan) , தாய்லாந்து, கியூபா (Cuba) , மலேசியா, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் (Uzbekistan ) ஆகியவை 2025 ஜனவரி 1 முதல் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் தோழமை நாடுகளாக இணையும் என கிரெம்ளின் (Kremlin ) உதவியாளர் யூரி உஷாகோவ் ( Yury Ushakov ) தெரிவித்தார்.
கசானில் ( Kazan) னில் நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டிற்கு முன்னதாக , BRICS சில் இணைவதற்காக நிபந்தனையுடன் 35 விண்ணப்பங்களைப் பெற்றோம் என்று அவர் கூறினார்.
சந்தேகத்திற்கு இடமின்றி, உச்சநிலை மாநாட்டின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று பிரிக்ஸ் தோழமை நாடுகளின் பிரிவை அமைத்தது மற்றும் 13 நாடுகளின் பட்டியலில் உடன்பாடு செய்து கொள்வதாகும். அதோடு இந்த நாடுகளுக்கு ஆலோசனைகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
இன்று வரை, பெலாருஸ் ( Belarus ), பொலிவியா (Bolivia) , இந்தோனேசியா, கஜகஸ்தான் (Kazakhstan) , தாய்லாந்து, கியூபா (Cuba) , மலேசியா, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் (Uzbekistan ) ஆகியவை பிரிக்ஸ் தோழமை நாடுகளாக ஆகுவதற்குத் தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன என்று Yury கூறினார்.
அழைப்பு அனுப்பப்பட்ட மற்ற நான்கு நாடுகளின் பதில்களை எதிர்காலத்தில் பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 20 க்கும் மேற்பட்ட நாடுகள் BRICS சின் பணிகளில் ஆர்வம் காட்டியுள்ளன, மேலும் ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட தோழமை நாடுகள் இணைவதற்காக இயக்கத்தின் கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.