கோலாலம்பூர், டிச 23 – மலேசிய ஏர்லைன்ஸ் புதிதாக விநியோகம் செய்த A330neo விமானத்தில் பழுதடைந்த பாகம் இருப்பதாகவும், பாகத்தை மாற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ரோல்ஸ் ராய்ஸ் ( Rolls Royce ) பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.
தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க மலேசிய ஏர்லைன்ஸ்சுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். தொடக்கமாக ஒரு பாகத்தில் தவறான கூறுகள் கண்டறியப்பட்டன. அந்த பாகத்தை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ரோல் ரோஸ்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் Trent 7000 இன்ஜின் மூலம் இயங்கும் A330neo என்ற புதிய விசாலாமான விமானத்தை இவ்வாண்டு டிசம்பர் 19, ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் மிகவும் ஆரவாரத்துடன் வெளியிட்டது.
சில நாட்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்டது.
புதிய Airbus A330neo விமானத்தை குறைந்தபட்சம் 48 மணிநேரங்களுக்கு தரையிறக்க வேண்டும் என்று பிஸ்னஸ் டைம்ஸ் (Business Times ) ஞாயிற்றுக்கிழமையன்று தகவல் வெளியிட்டிருந்தது.
அந்த விமானத்தில் மூன்று தொழில்நுட்ப சிக்கல்கல் கண்டறியப்பட்டதோடு தொழிற்சாலையின் மோசமான தரமற்ற வேலைகளே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிய விமானத்தைச் சுற்றியுள்ள தொழில்நுட்ப சிக்கல்களை தீர்ப்பதற்கு மலேசிய ஏர்லைன்ஸ்ஸிற்கு ஆதரவாக இருப்பதாக Airbus பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.