
டென்மார்க், ஆகஸ்ட் 5 – டென்மார்க் வடக்குப் பகுதியிலுள்ள மிருகக்காட்சிசாலை நிர்வாகம், தங்கள் மிருகக்காட்சி சாலையிலிருக்கும் மாமிச உண்ணி விலங்குகளுக்கு வீடுகளிலிருக்கும் தேவையற்ற செல்லப்பிராணிகளை உணவாக வழங்க வேண்டுமென்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
விலங்குகளின் இயற்கை உணவுச் சங்கிலியைப் பின்பற்றும் நோக்கில் இந்த கோரிக்கை அமைந்துள்ளதென்றும் அந்நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த கோரிக்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகி, கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில் ஆதரவு தெரிவித்தும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோழிகள், முயல்கள் மற்றும் பன்றிகள் போன்ற பிராணிகளை தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக மிருகக்காட்சி சாலை நிர்வாகத்தினர் குறிப்பிடத்தக்கது.
பயிற்சி பெற்ற ஊழியர்களால் கருணைக்கொலை செய்யப்பட்ட பிறகே ஆசிய சிங்கம், ஐரோப்பிய லின்க்ஸ் மற்றும் சுமத்ரான் புலி போன்ற மாமிச உண்ணி விலங்குகளுக்கு உணவாக அந்த்க செல்லப்பிராணிகள் வழங்கப்படுமென்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
மிருகக்காட்சிசாலையின் இந்த பொது வேண்டுகோள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.