
காஜாங், செப்டம்பர்-15 – காஜாங், சுங்கை லோங், ஜாலான் புக்கிட் எங்காங்கில் நேற்று காலை மலையேறுதலில் ஈடுபட்டிருந்த போது, 58 வயது ஆடவர் உயிரிழந்தார்.
காலை 8 மணி வாக்கில் தகவல் கிடைத்து சுங்கை லோங் போலீஸாரும் காஜாங் மருத்துவமனைக் குழுவினரும் சம்பவ இடம் விரைந்தனர்.
அங்கே அவ்வாடவர் சாலையின் தனியாக விழுந்துகிடந்தார்; அவருக்கு அருகில் கைத்தடியும் கைப்பேசியும் அப்படியே இருந்தன.
மலையேறும் போது சரிந்து விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக, காஜாங் போலீஸ் கூறியது.
இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டதே அவரின் மரணத்திற்குக் காரணம் என்பது சவப்பரிசோதனையில் உறுதியானது.
இதையடுத்து திடீர் மரணமாக அது வகைப்படுத்தப்பட்டது.