Latestஉலகம்

மழை நீரை அருந்தி 66 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த ரஷ்ய ஆடவர் உயிருடன் மீட்பு

மோஸ்கோவ், அக்டோபர்-17, கடலில் படகு கவிழ்ந்ததால் வெறும் மழை நீரை அருந்தி 66 நாட்கள் உயிர் வாழ்ந்த ரஷ்ய நாட்டு ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

46 வயது மிக்காயில் பிச்சுகின் (Mikhail Pichugin) மிகவும் பலவீனமான நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று ரஷ்யாவின் Kamchatka தீபகற்பத்தின் கரையோரப் பகுதியில் மீனவப் படகால் காப்பாற்றப்பட்டார்.

தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வரும் மிக்காயில், கடவுளின் கிருபையாலே தாம் இன்னும் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்.

அதோடு கடலில் தத்தளித்த 2 மாதங்களுக்கும் தனக்கு உற்றத் தோழனாக விளங்கிய ‘தேவதை’ (Angel) என அவர் வருணிக்கும் படகுக்கும் மிக்காயில் நன்றிக் கூற மறக்கவில்லை.

உணவுக் கையிருப்பு 2 வாரங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடித்ததால், எஞ்சிய காலத்திற்கும் அவர் மழை நீரை குடித்து வந்துள்ளார்.

ஒட்டகங்களின் உரோமங்கள் அடங்கிய தூங்குப் பையை பாதுகாப்புக்கு வைத்துள்ளார்.

வீட்டிலிருக்கும் குடும்பத்தாருக்காக, நடுக்கடலில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.

சுமார் 100 கிலோ உடல் எடையைக் கொண்டிருந்தவர், இந்த 66 நாட்களில் சரிபாதியாக மெலிந்திருக்கிறார்.

மிக்காயிலுடன் படகில் சென்ற அவரின் 49 வயது அண்ணனும், 15 வயது அண்ணன் மகளும் காப்பாற்றப்படுவதற்கு முன்பே துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர்.

கடவுளின் அருளால் மிக்காயில் உயிர் பிழைத்தாலும், பிரச்னை அதோடு நின்றுவிடவில்லை.

கடலில் பாதுகாப்பு விதிமுறை மீறல் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் அவரை விசாரித்து வருகின்றனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!