Latestமலேசியா

மாச்சாங்கில் பிறந்த குழந்தையைக் கைவிட்டுச் சென்ற இளம் பெண்ணுக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

மாச்சாங், செப்டம்பர் -23 – கிளந்தான் மாச்சாங்கில் தான் பிரசவித்த ஆண் குழந்தையை வீசியக் குற்றத்திற்காக, 22 வயது இளம் பெண்ணுக்கு நீதிமன்றம் 2,000 ரிங்கிட் அபராதம் அல்லது 4 மாத சிறைத்தண்டனை விதித்தது.

குற்றத்தை ஒப்புக் கொண்ட வேலையில்லாத அப்பெண், ஏதோ ஒரு பயத்தில் அப்படி செய்து விட்டதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

அபராதத்தைச் செலுத்தியதால் அவர் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார்.

செப்டம்பர் 7-ம் தேதி மாலை 6 மணியளவில் மாச்சாங்கில் உள்ள கிராமத்தில், எண் இல்லாத வீட்டில் அக்குழந்தையைக் கைவிட்டுச் சென்றதாக அப்பெண் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

குழந்தைப் பிறந்ததை மறைத்து அதை வீசியக் குற்றத்திற்கு, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு.

அப்பெண் கைவிட்டுச் சென்ற குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டு தற்போது சமூக நலத்துறையானா JKM-மின் பராமரிப்பில் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!