கோலாலம்பூர், செப்டம்பர்-6 – ஜோகூரில் பள்ளிப் பேருந்தில் மாணவிகளை வீடியோ எடுத்து பேருந்து ஓட்டுநர் டிக் டோக்கில் பதிவிட்ட விவகாரத்தில், இத்தனை நாளும் டிக் டோக் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன்?
இத்தனை நாட்களாக அவரின் கணக்கு இயங்கி வருவதை டிக் டோக் எப்படி அனுமதித்தது?
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அந்த கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.
சர்ச்சைக்குள்ளான டிக் டோக் பதிவுகள் கீழ் வைக்கப்பட்டுள்ள கருத்துகளைப் படித்துப் பார்த்தால், அதை விட கூடுதல் கவலை ஏற்படுகிறது.
இன்னும் எத்தனை டிக் டோக் கணக்குள் இது போன்று செயல்பட்டு வருகின்றனவோ என்ற கேள்வி தமக்குள் ஏற்பட்டிருப்பதாக ஃபாஹ்மி சொன்னார்.
இந்நிலையில், இன்று காலை டிக் டோக் தரப்பை தாம் தொடர்புக் கொண்டு பேசியதாகவும், போலீஸ் விசாரணைக்கு அந்த சமூக ஊடகம் நல்ல ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
போலீசுக்குத் தேவைப்படும் விவரங்கள் விரைந்து கிடைப்பதை உறுதிச் செய்ய, மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமும் (MCMC) டிக் டோக்கைத் தொடர்புக் கொண்டிருக்கிறது.
மாணவிகளை வீடியோ எடுத்து பதிவேற்றியதற்காக, 24 வயது பள்ளி ஓட்டுநர் சிம்பாங் ரெங்கத்தில் இன்று அதிகாலை கைதுச் செய்யப்பட்டு, விசாரணைகளுக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.