Latest

மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்களுக்கு இடம் ஒதுக்கீடு – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வரலாற்றுப்பூர்வ சாதனை

கோலாலம்பூர், செப்டம்பர் 26 – கூட்டரசுப் பிரதேச அமைச்சின் கீழ் இயங்கும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும், வரலாற்றுப் பூர்வமான சாதனையை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் செய்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி கூட்டரசுப் பிரதேச அமைச்சிடம், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் முன்வைத்த இந்த தமிழ் புத்தங்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு, தற்போது இசைவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடம் ஒதுக்கீட்டிற்கு முதல் கட்டமாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 100 புத்தகங்களை வழங்கவுள்ள நிலையில், அதனை ஏற்கவும் நூலகம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைக்குத் துணைநின்ற அமைச்சரின் சிறப்புச் செயலாளர் வழக்கறிஞர் சிவமலர் அவர்களுக்கும், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்களுக்கும், இவ்வேளையில் சங்கம் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!