
கோலாலம்பூர், – கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10.30 மணிக்கு மலேசிய மாமன்னரின் விரைவான உடல் நல மீட்சிக்காக பத்துமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெறும் மாமன்னரின் உடல்நலம் மீண்டும் விரைவாக உடல்நலம்தேறி பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் எனும் நோக்கி , இந்த பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக , கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஶ்ரீ நடராஜா தெரிவித்துள்ளார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, மாமன்னரின் ஆரோக்கியத்திற்காக இறைவனை பிரார்த்திக்க அழைக்கப்படுகிறார்கள்.
“நாட்டின் உச்ச தலைவராக இருக்கும் மாமன்னர், மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார். அவர் உடல் நலம் பெற்று சீக்கிரம் நாடு திரும்பி, மீண்டும் மக்களோடு இணைந்து பணியாற்ற அவருக்காக இறைவனை வேண்டுவோம் என நடராஜா பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.