
வாஷிங்டன், பிப்ரவரி-14 – அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அதிபர் டோனல்ட் டிரம்பைச் சந்தித்துள்ளார்.
ஏற்கனவே நல்ல நட்பிலிருக்கும் இருவரும் கைக்ககுலுக்கி ஆரத்தழுவி பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர்.
டரம்ப் இரண்டாம் தவணையாக அதிபரான பிறகு இருவருக்கும் இடையில் நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.
டிரம்ப் பதவியேற்றப் பிறகு அமெரிக்கா சென்று அவரைப் பார்த்துள்ள ஒரு சில உலகத் தலைவர்களில் மோடி முக்கியமானவராவார்.
வெள்ளை மாளிகை சந்திப்பு இரு வழி உறவை மேம்படுத்துவதற்காக என்றாலும், இம்முறை வாணிபம், வரி விதிப்பு, கள்ளக்குடியேறிகள் போன்ற அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இரு தலைவர்களும், ரஷ்யா-யுக்ரேன் போர் முதல் வங்காளதேச விவகாரம் வரை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
குறிப்பாக இந்தியாவும் – அமெரிக்காவும் மிகச் சிறந்த வாணிப ஒப்பந்தத்தைப் போடவிருப்பதாக டிரம்ப் கூறினார்.
அதே சமயம் மோடியின் நோக்கம், இந்தியாவுக்கு சாதகமாக வாஷிங்டனுடன் ஒப்பந்தங்களை செய்துகொள்வதே என எதிர்பார்க்கப்படுகிறது.
வாணிபங்களை மேம்படுத்தி, அதிக இறக்குமதி வரியைத் தவிர்ப்பதற்கு, டிரம்ப் உடனான சந்திப்பை அவர் நன்கு பயன்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நிய முதலீடு, விசா, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களும் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் முக்கிக் குறிக்கோளாக உள்ளன.