லண்டன், நவம்பர்-21 – சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் (Jaguar) விரைவில் மின்சார சக்தியில் மட்டுமே இயங்கும் வாகனமாக மறுதோற்றம் காணவிருப்பதை முன்னிட்டு, அதன் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜாகுவார் கார்களில் தாவுவது போலிருக்கும் ஜாகுவார் பூனைச் சின்னமான Leaper, முன்பை விட சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக, ‘Delete Ordinary’ என்ற வியாபார யுக்தியிலான சுலோகமும் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய jaguar எழுத்துருவும் கண்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஜாகுவார் நிறுவனம், புதிய சின்னம் கற்பனை வளமிக்கது, தைரியமானது, கலைநயமிக்கது என வருணித்தது.
பிரிட்டன் முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள Jaguar, மின்சார வாகனங்களுக்கு மாறும் திட்டத்தை 2021-ல் அறிவித்தது.
Tata Motors-க்குச் சொந்தமான அந்நிறுவனம் 2026-ல் 3 புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும்.
அதற்கு முன்னோட்டமாக புதியக் கார்களின் விற்பனையை ஓராண்டுக்கு முன்பே சந்தையிலிருந்து மீட்டுக் கொண்டு விட்டது.
புதிதாக வரவிருக்கும் மாடல்களுக்கும் பழையை மாடல்களுக்கும் ஓர் இடைவெளி இருப்பதை உறுதிச் செய்யவே அவ்வாறு செய்யப்பட்டது.