Latestமலேசியா

மின் சிகரெட் & வேப் பயன்பாட்டிற்கு முழுத் தடை – சுகாதார அமைச்சர்

ஜோகூர் பாரு, டிசம்பர் 16 – மின் சிகரெட் மற்றும் வேப் பொருட்களுக்கு முழுமையான தடை விதிக்கும் நடவடிக்கையை அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் Dzulkefly Ahmad தெரிவித்தார். இதற்கான அமைச்சரவை நினைவுப்பத்திரம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

வேப் பயன்பாட்டால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தடைசெய்யப்பட்ட பொருட்கள் கலந்த திரவங்களும் கண்டறியப்பட்டதால், அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்தத் தடை, அதிகபட்சமாக 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், சமூக மற்றும் சட்ட விளைவுகளை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தத் தடை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, முதலில் திறந்த அமைப்பு வேப் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!