பிந்துலு, செப்டம்பர்-5 – சரவாக், பிந்துலுவில் கடை விற்பனை உதவியாளராக வேலை செய்யும் நடுத்தர வயதை தாண்டிய மாது, Love Scam காதல் மோசடியில் சிக்கி 140,000 ரிங்கிட்டை பறிகொடுத்துள்ளார்.
Genghis Guo என்ற பெயரில் கியூபா நாட்டைச் சேர்ந்த ஆடவருடன் முகநூல் வாயிலாக அப்பெண்ணுக்கு அறிமுகமாகி, பின்னர் அது காதலாக மாறியது.
கியூபாவில் மருத்துவராக வேலை செய்வதாகவும் அப்பெண்ணை அவன் நம்ப வைத்துள்ளான்.
ஆஸ்திரேலியா, மெல்பர்னில் இருந்து திரும்பும் வழியில் இங்கு வந்து பார்ப்பதாகவும் அவன் வாக்குறுதி அளித்தான்.
இந்நிலையில், கடந்த மாத மத்தியில் மருத்துவர் வேலையிலிருந்து விலகி விட்டதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவன், வேலை ஒப்பந்தத்தை மீறியதால் இழப்பீடு கொடுக்க பணம் தந்து உதவுறுமாறு அம்மாதுவிடம் கேட்டுள்ளான்.
ஒருநாள், அவன் விபத்தில் சிக்கி கவலைக்கிடமாக இருப்பதாக மின்னஞ்சல் வாயிலாக செய்தி வந்தது.
சிகிச்சைக் கட்டணத்தைச் செலுத்தா விட்டால் அவனை போலீஸ் பிடித்து விடுமென மினஞ்சலில் கூறப்பட்டதை நம்பி, கட்டம் கட்டமாக மொத்தம் 140,000 ரிங்கிட்டை அம்மாது அவனது வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளார்.
மீண்டும் மீண்டும் ஏதேதோ காரணங்கள் சொல்லி, பணம் கேட்டு நச்சரித்த போதே, தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அம்மாது போலீசில் புகார் செய்தார்.