
கோலாலாம்பூர், ஜூலை-16- பாதுகாக்கப்பட்ட பகுதியான நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக சீன நாட்டு YouTube பிரபலம் ஒருவருக்கு கோலாலாம்பூர், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM800 அபராதம் விதித்துள்ளது.
குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து Li Zhechen-னுகு மாஜிஸ்திரேட் அருண்ஜோதி செல்வராஜு அந்த அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தார்.
அபராதம் செலுத்தத் தவறினால் 1 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.
அக்குற்றத்திற்கு அதிகபட்சமாக RM1,000 அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுண்டு.
ஜூலை 9-ஆம் தேதி புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக நாடாளுமண்ற வளாகத்திற்குள் Li அத்துமீறியுள்ளார்.
பின்னர் அங்கு கடமையிலிருந்த போலிஸார் அவரைக் கைதுச் செய்தனர்.