
நியூ டெல்லி, பிப்ரவரி 4 – இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில், நேற்றிரவு தரையில் நகர்ந்துகொண்டிருந்த ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று உரசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த பயணிக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தின் போது, புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் மற்றும் தரையிறங்கிய பின் நகர்ந்துகொண்டிருந்த இண்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்களின் வலது பக்க இறக்கையின் முனைகள் ஒன்றுடன் ஒன்று உரசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஇருந்தபோதும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஏர் இந்தியா விமானம் கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற நிலையில், இண்டிகோ விமானம் ஹைதராபாத் நகரிலிருந்து மும்பை வந்து தரையிறங்கியது. இரு விமானங்களும் ஏர்பஸ் வகையைச் சேர்ந்தவை என்றும், தற்போது பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



