கோலாலம்பூர், டிச 23 – முன்னாள் போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ மூசா ஹாசனுக்கு (Tan Sri Musa Hassan) எதிராக Segambut நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா யோ (Hannah Yeoh) தொடுத்திருந்த அவதூறு வழக்கை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தோடு மூசா ஹசானுக்கு செலவுத் தொகையாக 40,000 ரிங்கிட் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன் மாரா தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் மூசா ஆற்றிய உரை தொடர்பாக அவருக்கு எதிராக ஹன்னா இயோ அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.
2020 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கின் மூலம், மூசா தன்னைப் பற்றி அந்த கருத்தரங்கில் பொய்யான அறிக்கை வெளியிட்டு, தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.
மலேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றுவதற்கும், இஸ்லாம் மற்றும் மலேசியாவை சிறுமைப்படுத்துவதற்கும் , நாட்டின் நலன்களுக்கு மேலாக தனது தனிப்பட்ட நலன்களை வைப்பதற்கும் ” Becoming Hannah: A Personal Journey’ என்ற புத்தகத்தை ஹன்னா இயோ எழுதியதாக மூசா ஹசான் குற்றம் சாட்டியிருந்தார்.
மூசா வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு தவறான உள்நோக்கம் இருப்பதை ஹன்னா இயோ நிருபிக்க தவறிவிட்டார் என நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக நீதித்துறை ஆணையர் Arziah Mohamed Apandi தெரிவித்தார்.