Latestமலேசியா

மூத்த சகோதரர் பாராங்கினால் தாக்கினார் ஆடவர் காயம்

சிரம்பான், ஏப் 10 – Johol லில் தாமான் ஆயர் மாவாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தகராறில் தனது மூத்த சகோதரரால் பாராங்கினால் தாக்கப்பட்ட ஆடவர் காயம் அடைந்தார்.

நேற்று மாலை மணி 3.40 அளவில் நடந்த அந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட 27 வயது நபரிடமிருந்து புகார் பெறப்பட்டதாக கோலாப் பிலா போலீஸ் தலைவர் Superintenden முகமட் முஸ்தபா உசேய்ன் ( Muhamad Mustafah Hussin ) தெரிவித்தார்.

புகார்தாரர் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, ​​தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக முற்றியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், பாதிக்கப்பட்டவரின் சகோதரர் ஒரு பெரிய கத்தியுடன் வீட்டிற்கு வந்து அவரைத் தாக்கினார்.

அவர்கள் இருவரும் சண்டையிட்டதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக முகமட் முஸ்தபா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இடது மணிக்கட்டில் காயம் அடைந்த பாதிக்கப்பட்டவருக்கு சிரம்பான் துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதே சமயம், அவரது சகோதரருக்கு கையில் சிறு காயங்கள் ஏற்பட்டதால், அவர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்.

குற்றவியல் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் விசாரணைக்கு கு உதவுவதற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!