Latestமலேசியா

மூளையில் காயம்: முன்னாள் பாதுகாவலருக்கு RM1.8 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

தைப்பிங், டிசம்பர்-26 – 8 ஆண்டுகளுக்கு முன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்ற போது மருத்துவர்களின் கவனக்குறைவால் மூளையில் காயமடைந்த முன்னாள் பாதுகாவலருக்கு, 1.8 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

28 வயது பி.தினகரன் மலேசிய அரசாங்கம், தைப்பிங் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் 3 மருத்துவர்களைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு, தைப்பிங் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்நிலையில் தனது வழக்கின் முகாந்திரத்தை நிரூபித்திருப்பதால், தினகரன் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக, நீதிபதி Noor Ruwena Md Nurdin கூறினார்.

2016-ஆம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி மதியம் 1 மணியளவில் தினகரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் காருடன் மோதியது.

அதில் பல எலும்பு முறிவுக்கு ஆளான அவர் தைப்பிங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

எனினும், பிரதிவாதிகளின் போதியக் கண்காணிப்பு இல்லாததாலும், விபத்து நிகழ்ந்த 24 மணி நேரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்தத் தவறியதாலும் அவரின் நிலைமை மோசமாகி, மூளையில் நிரந்தர காயம் ஏற்பட்டு விட்டது.

எனவே, தினகரனின் இன்றைய நிலைமைக்கு பிரதிவாதிகளே கூட்டுப் பொறுப்பு எனக் கூறி நீதிபதி அந்த 1.8 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு அவர்களை உத்தரவிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!