
பாரிட் புந்தார், செப் 11 – மெக்னம் கேர்ஸ் CSR & ESG திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக நாடு முழுவதும் தேவைப்படும் பள்ளிகளுக்கு டிஜிட்டல் ஸ்மார்ட் போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிறது.
அந்த வகையில் ஸ்மார்ட் போர்ட் ஒன்று பேராக், பாரிட் புந்தார், சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
இதன்வழி நவீனமயமான தொழில்நுட்பம், கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்தும் முக்கிய வசதியைக் கொண்ட பள்ளியாக சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளி மாற்றம் கண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போர்டை பள்ளியின் தலைமையாசிரியர் சுப்ரமணியம் ஒப்படைத்தார் மெக்னம் துணைத் தலைவர் கோ சின் கீன்.
இந்த நிகழ்ச்சியில் ESG & CSR துணைத்தலைவர் அமீலியா டி.மா , பேராக் வட்டார துணைத்தலைவர் சான் சிட் மின், வணக்கம் மலேசியா செயல்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை சாந்தி கணேசன் , பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் துரைசாமி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்குப்பின் சிம்பாங் லிமா தமிழ்ப்பள்ளியையும் அவர்கள் பார்வையிட்டதோடு மாணவர்களையும் சந்தித்தனர்.