கோலாலம்பூர், டிசம்பர்-28, வாழ்க்கை பல அதிசயங்களைக் கொண்டது; அடுத்து யாருக்கு என்ன நடக்குமென்பதை கணிக்க முடியாது.
அப்படித்தான் அண்மைய
மெக்னம் குலுக்கலில் Lucky Pick எனப்படும் கணினி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பந்தய எண்கள் இருவருக்கு பெரும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்துள்ளன.
சிலாங்கூர் காப்பாரைச் சேர்ந்த முதலாமாவர் மெக்னம் லைஃப் முதல் பரிசான ஒரு நாளைக்கு 1,000 ரிங்கிட் வீதம் 20 வருடங்களுக்கு பரிசுமழையை வென்றார்.
அன்றைய தினம் முதல் பரிசை வென்ற எண்கள் 05, 09, 10, 16, 18, 30, 33, 34 ஆகும்.
மெக்னம் லைஃப் தொடங்கிய காலம் முதல், தான் வகுத்து வைத்துள்ள கணித முறைப்படி அவ்வாடவர் பந்தயம் கட்டி வருகிறார்.
அன்றைய தினம் ஏதேச்சையாக விற்பனை மையக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த lucky pick குலுக்குச் சீட்டு தன் கவனத்தை ஈர்த்து, அதனை வாங்கியதாக அவர் சொன்னார்.
இரண்டாமவரான கெப்போங்கைச் சேர்ந்த ஆடவருக்கு, 14-ம் தேதி நடந்த குலுக்கலில் 4D ஜேக்போட் முதல் பரிசான 22.3 மில்லியன் ரிங்கிட் விழுந்தது.
அவர் பந்தயம் கட்டிய எண்கள் 8792 + 2820 ஆகும்.
ஓட்டுநராகப் பணிபுரியும் அவ்வாடவர் அன்றைய தினம் அலுவலகத்தில் எல்லா வேலைகளும் சுமூகமானப் போனதால் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க மெக்னம் கடைக்குச் சென்றுள்ளார்.
வழக்கமாக mbox பந்தயத்தில் ஆர்வம் காட்டும் அந்நபரின் கண்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டைத் தாண்டியிருந்த முதல் பரிசுக்கான 4D ஜேக்போட் lucky pick எண்கள் கண்ணில் பட்டன.
அச்சீட்டை வாங்கிச் சென்றவர், இரவில் குலுக்கல் முடிவைப் பார்த்து நம்ப முடியாமல் திகைத்துப் போனார்.
வீட்டின் முழுப் பொறுப்பையும் கவனித்து வரும் தமக்கு இப்பரிசுப் பணம் பேருதவியாக இருக்குமென ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அவ்வாடவர் கூறினார்.