Latestமலேசியா

மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியரை மோதினார் பிக்அப் ஓட்டுநருக்கு ரி.ம 11,000 அபராதம்

தாவாவ், டிச 17- ஜூன் மாதத்தில் ஜோகிங் செய்யும் போது ஆசிரியரை மோதி காயம் ஏற்படுத்தியது உட்பட ட ஐந்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு பிக்அப் லாரி ஓட்டுநருக்கு மொத்தம் 11,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (சட்டம் 333/87) பிரிவு 43(1) இன் கீழ் அனைத்து குற்றச்சாட்டுகளும் மாஜிஸ்திரேட்
டோன் ஸ்டிவின் மலஞ்சும் ( Don Stiwin Malanjum ) முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது , 29 வயதான முகமட் ஹிக்மல் போலோங்
( Mohd Hikmal Bolong ) குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

அலட்சியமாக வாகனம் ஓட்டி 33 வயதுடைய ஆசிரியருக்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக முகமட் ஹிக்மலுக்கு 8,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

இவ்விபத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவருக்கு மண்டை ஓட்டில் இரத்தப்போக்கு, தலையின் பின்புறத்தில் கீறல், கல்லீரல் காயம், உடைந்த விலா எலும்புகள் மற்றும் அவரது வலது காலில் கடுமையான காயம் உள்ளிட்ட லேசான அதிர்ச்சிகரமான மூளைக் காயம் உட்பட கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

இதர நான்கு குற்றச்சாட்டுகளுக்கும், பிரிவு 52(1) மற்றும் பிரிவு 52(2) இன் கீழ் 1,000 ரிங்கிட் அபராதமும் , அதே நேரத்தில் பிரிவு 15(1)(a) மற்றும் பிரிவு 90(1) இன் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றங்களுக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!