Latestமலேசியா

மென்சஸ்டரில் களைக் கட்டிய வட இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தின் பிரமாண்ட தீபாவளி விழா 2025

மென்செஸ்டர், அக்டோபர்-22 – 39 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தைப் பேணிவரும் வட இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் சார்பில், _’தீபாவளிக் கொண்டாட்டம் 2025’_ எனும் பிரமாண்ட கலை விழா மென்செஸ்டர் மாநகரில் நடைபெற்றது.

 

வட இங்கிலாந்தின் 10 மண்டலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்தியத் தூதரக அதிகாரி விஷாகா யதுவன்சி தலைமையில், Croda நிறுவனத்தின் திருச்செல்வம் மற்றும் Royal College of Anaesthesia UK-வைச் சேர்ந்த Dr கணேசன் பரணிதரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

 

நடனம், நாடகம், இசை, சிலம்பம், பரதநாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகளால் விழா மிளிர்ந்தது.

 

கலைப் போட்டிகளில் மென்செஸ்டர் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

விழாவில் திரட்டப்பட்ட நிதியிலிருந்து ₹1 லட்சம் தொகை குழந்தைகளின் நீரிழிவு நோய் நிவாரணத்திற்காக தமிழகம் கோயமுத்தூரின் “இதயங்கள்” அமைப்புக்கு வழங்கப்பட்டது.

 

7 மணி நேரம் நீண்ட இந்த வண்ணமயமான நிகழ்ச்சி, தமிழின் மரபும் கலையும் வெளிநாட்டில் பிரகாசிப்பதை எடுத்துக்காட்டியது.

 

வட தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜோசப் கருணா தலைமையில் தன்னார்வலர்கள் ஒற்றுமையாக நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.

 

தமிழின் செழுமையான பண்பாட்டையும், கலை மரபையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக இந்த விழா அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!