Latest

மேற்கு இந்தியாவில் கேளிக்கை கண்காட்சியில் ராட்டிணம் இடிந்து விழுந்தது; நால்வர் காயம்

நவ்சாரி, ஆக 19 – மேற்கு இந்தியாவில் கேளிக்கை கண்காட்சியில் Spinning Fairground Ride இடிந்து விழுந்ததில் நால்வர் காயம் அடைந்தனர்.

குஜராத்தின் Navsari நகரில் அந்த சாதனம் ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்ததாக AP செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

காயம் அடைந்த நால்வரில் இரண்டு சிறார்கள், ஒரு ஆடவர் மற்றும் பெண்மனியும் அடங்குவர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

வண்ணமயமான சுழலும் சாதனம் ஒரு எஃகு கம்பத்தைச் சுற்றி சுழன்று கொண்டிருந்த தருணத்தை Viral Press வீடியோ பதிவு செய்த அடுத்த சில வினாடிகளில் பலத்த சத்தம் கேட்டதோடு , அந்த சாதனத்தில் ஏறி அமர்ந்திருந்தவர்களின் நடைமேடை 15.24 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்தது.

அச்சம்பவத்தின்போது அதில் அமர்ந்திருந்த மக்கள் அலறும் சத்தத்தையும் கேட்க முடிந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!