Latestமலேசியா

மொத்த சந்தை சுற்றி வளைக்கப்பட்டது; 28 வெளிநாட்டவர்கள் கைது

ஜோர்ஜ்டவுன், ஜனவரி-7 -பினாங்கு, ஜோர்ஜ்டவுன் Gat Lebuh Macallum சாலையில் உள்ள மொத்தை சந்தையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் பல்வேறுக் குற்றங்களுக்காக 28 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைதாகினர்.

திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய அச்சோதனையில் 57 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

MBPP எனப்படும் பினாங்குத் தீவு மாநகர மன்றமும், குடிநுழைவுத் துறையும் இணைந்து அச்சோதனையை மேற்கொண்டன.

அதிகாரிகளைக் கண்டதும்  பலர் தலைத்தெறிக்க ஓடினார்; எனினும் அவ்வளாகம் முன்கூட்டியே சுற்றி வளைக்கப்பட்டதால் எவராலும் தப்பியோட முடியவில்லை.

அச்சோதனையில், MBPP-யின் பெர்மிட் இல்லாமல் இயங்கி வந்த 4 உணவகங்கள் உட்பட 6 வியாபாரத் தளங்களுக்கு நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன.

கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய ஒரு முதலாளி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!