நெகிரி செம்பிலான், டிசம்பர் 21 – 2024ஆம் ஆண்டின் மிகப்பெரிய யோகா போட்டியில் 775 பங்கேற்பாளர்களுடன் மலேசியா சாதனை புத்தகத்தில் அங்கீகாரம் பெற்றது சக்தி யோகா பள்ளி.
சக்தி யோகா பள்ளி மற்றும் நாட்டின் பல யோகா பள்ளிகளுடன் இணைந்து, இந்த போட்டி கடந்த டிசம்பர் 21ஆம் திகதி, லுகுட் நெகிரி செம்பிலானில் நடைபெற்றது.
இதில், 741 போட்டியாளர்கள் நேரடியாகப் பங்கேற்றனர்.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான போட்டியாளர்கள், தங்கள் பிரிவுகளில் மூன்று விதமான ஆசனங்களை இரு நிமிடங்களுக்குள் படைப்பாற்றலுடன் வெளிப்படுத்தினர்.
இந்த போட்டி, யோகாவின் உடல் பயிற்சிகள் மட்டுமல்லாமல், மனதின் உணர்ச்சிகளின் பரிமாணங்களையும் கொண்டிருந்தது.
இது, போட்டியாளர்களுக்கு யோகாவில் தங்களின் திறன்களை மேம்படுத்தும் அரிய வாய்ப்பாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பார்வையளர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து இச்சாதனையைக் கொண்டாடினர்.