
கோலாலம்பூர், நவ 5 – ரவாங், பண்டார் தாசேக் புத்திரியில் (Bandar Tasik Puteri) பதின்ம வயதுப் பெண்ணை கற்பழித்தாக கூறப்படும் 54 வயது ஆடவன் ஒருவன் கைது செய்யப்பட்டதை Gombak போலீஸ் தலைவர் நோர் அரிப்பின் நாசிர் ( Noor Ariffin Nasir ) உறுதிப்படுத்தினார்.
திங்கட்கிழமை இரவு மணி 8.15 அளவில் பாலியல் வன் கொடுமைக்கு 13 வயது இளம் பெண் உள்ளானது தொடர்பில் போலீசார் புகாரை பெற்றனர்.
அந்த பெண் தனக்கு அறிமுகமான அண்டை வீட்டுப் பகுதியில் குடியிருக்கும் நபரினால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் 35 வயது தாயார் இச்சம்பவம் குறித்து புகார் செய்துள்ளார். புகார் பெறப்பட்ட அதே தினத்தில் அந்த சந்தேகப் பேர்வழியை Bandar Tasik Puteri வட்டாரத்தில் கோம்பாக் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த ஆடவன் எழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான். குற்றவியல் சட்டத்தின் 376 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.



