
லங்காவி, அக்டோபர் 3 – இன்று மதியம், லங்காவி கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்த பராமரிப்பு பணியாளர் ஒருவரைத் தேடும் பணிகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரண்டாவது தளத்தில் கேபிள் கார் பராமரிப்பு பணியின் போது, ஏறக்குறைய 50 மீட்டர் உயரத்திலிருந்து அந்த பணியாளர் தவறி கீழே விழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தகவல் கிடைக்கப்பெற்று விரைந்த கெடா தீயணைப்பு மீட்புக் குழுவினர், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் நிலை இன்னும் கண்டறியப்படவில்லை.