Latestமலேசியா

லங்காவி மலையில் காணாமல் போன 2 சிங்கப்பூர் மலையேறிகள் பாதுகாப்பாக மீட்பு

லங்காவி, டிசம்பர்-30 – லங்காவி, Gunung Mat Cincang-ங்கில் நேற்று மலையேறும் போது காணாமல் போனதாகக் கூறப்பட்ட இரு சிங்கப்பூர் ஆடவர்கள் இன்று அதிகாலை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மதியம் வாக்கில் மலையேறிய 23 வயது Wang Cheng Kang, 25 வயது Li Shuen Qi இருவரும் காணாமல் போன தகவல் நேற்றிரவு 10.30 வாக்கில் கிடைக்கப் பெற்றதாக, Padang Mat Sirat தீயணைப்புத் துறையின் தலைவர் Mohammad Zaidi Md Lazim தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடம் விரைந்த மீட்புக் குழுவினர், மலையேறிகள் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து தேடல் பணிகளை மேற்கொண்டனர்.

ஒருவழியாக அதிகாலை 2.50 மணியளவில் மலை உச்சியில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இருவரையும் அதிகாலை 4.30 மணியளவில் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக கீழே அழைத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!