Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீயை மோசமாக்க வருகிறது அபாயகரமான Santa Ana புயல் காற்று

லாஸ் ஏஞ்சலஸ், ஜனவரி-14, அமெரிக்கா, லாஸ் ஏஞ்சலஸில் மீண்டும் பலத்த காற்று வீசுவதால், இதுவரை 24 பேரை பலிகொண்ட வரலாறு காணாத காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பின்னடைவைச் சந்திக்கலாமென ஐயுறப்படுகிறது.

காட்டுத் தீயில் தலைநகர் வாஷிங்டன் நிலப்பரப்புக்கு ஈடான பகுதி முற்றாக அழிந்து போயுள்ளது.

இந்நிலையில், Santa Ana என பெயரிடப்பட்டுள்ள ‘அசுர’ காற்று, புதன் கிழமை வரை மணிக்கு 50 முதல் 70 மைல் வேகத்தில் வீசுமென தேசிய வானிலை சேவை மையம் சிவப்பு நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனால் காட்டுத் தீயின் இரண்டாம் அலை அதுவும், நடப்பிலுள்ளதை விட மோசமான அளவுக்கு தீ பரவலாமென பெரிதும் அஞ்சப்படுகிறது.

நடப்பு காட்டுத் தீ மேலும் பரவாமலிருப்பதைத் தடுப்பதில் தீயணைப்பு வீரர்கள் வெற்றிக் கொண்டுள்ள நிலையில், அடுத்து அவர்கள் புயல் காற்றினால் ஏற்படபோகும் அபாயத்தை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையே புரட்டிப் போட்டுள்ள Pallisades மற்றும் Eaton பகுதியிகள் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயை அணைக்க, 8,500 தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 150,000 பேர் லாஸ் ஏஞ்சலசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்; 87,000 பேர் அடுத்தக் கட்ட வெளியேற்றத்துக்குத் தயாராகி வருகின்றனர்.

155 சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட நிலப்பரப்பு தீயில் எரிந்ததில் 12,000-க்கும் மேற்பட்ட வீடுகளும் வணிக வளாகங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.

லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத் தீயால் இதுவரை ஏற்பட்ட மொத்த இழப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர் என கணிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!