
கோலாலும்பூர், ஜூலை 5- கடந்தாண்டு ஒலிம்பிக் பூப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘லீ ஜி ஜியா’, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக விசித்திரமான வரைபடங்களைப் பதிவேற்றி வருவது, மக்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பி வருகின்றது.
லீ ஜி, பதிவேற்றிய அனைத்து படங்களும் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதை உணர்த்துவது போல அமைந்திருகின்றது.
இந்நிலையில் இந்தப் படங்களைக் கண்ணுற்ற இரசிகர்கள் குறிப்பாக மலேசிய விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து அவருக்கு ஊக்கமளிக்கும் விதமாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அண்மையில் ஏற்பட்ட கணுக்கால் தசைநார் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகு லீ மீண்டும் மைதானத்திற்குத் திரும்புவார் என்றும், இன்னும் இரண்டு வாரங்களில் ஜப்பானில் நடைபெறவிருக்கும் ‘ஜப்பான் ஓபன்’ போட்டியில் களமிரங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.