Latestஉலகம்

லூயிஸ்வில்லில் UPS சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதால் பெரும் தீ; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

 

ஃபிராங்ஃபோர்ட், நவம்பர்-5,

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம் லூயிஸ்வில்லில் இன்று அதிகாலை பெரும் விமான விபத்து ஏற்பட்டது.

Honolulu-வுக்குப் புறப்பட்ட UPS சரக்கு விமானம், சில நிமிடங்களிலேயே திடீரென தீப்பிடித்து தரையில் மோதி வெடித்துள்ளது.

அந்த McDonnell Douglas MD-11 இரக சரக்கு விமானத்தில் 3 பணியாளர்கள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவர்களின் நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

எனினும், காயமடைந்தவர்கள் இருப்பதாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு, சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ‘shelter-in-place’ என்ற அவசர அறிவிப்பின் கீழ் வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டனர்.

தீப்பிடித்த பகுதியை அணைக்க தீயணைப்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய உடனடி விசாரணைகள் தொடங்கியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!