புத்ராஜெயா, நவ 11 – இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கராவில் உள்ள புளோரஸ் தீவு பகுதியில் உள்ள Lewotobi laki- laki எரிமலை குமுறியதைத் தொடர்ந்து அங்குள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
எரிமலை குமுறலின் காரணமாக வான் பகுதியில் சாம்பல் தூசுகளால் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மூடுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தோனேசியாவில் வசிக்கும் அல்லது அங்கு வருகை புரியும் மலேசியர்கள் கவனத்துடன் இருப்பதோடு அதிகாரிகள் வழங்கிவரும் தகவல்களை அறிந்துகொண்டு விழிப்புடன் இருக்கும்படி வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.