
வங்காளதேசம், நவம்பர் 21 – வங்காளதேசத்தில் இன்று காலை 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்ததின்படி, காலை மணி 10.08-க்கு ஏற்பட்ட இந்த அதிர்வின் தாக்கம், டாக்கா, கொல்கத்தா மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் தெளிவாக உணரப்பட்டது.
வங்காளதேசத்தில் கட்டிடங்களின் கூரை மற்றும் சுவர்கள் இடிந்ததால் அதிலிருந்து விழுந்த இரும்புக் கம்பிகள் மோதி மூவர் மரணமடைந்தனர். மேலும் மூவர் தாக்காவில் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் வீடுகளில் உள்ள பொருட்கள் யாவும் அதிர்வை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.



