Latestமலேசியா

வணக்கம் மலேசியா – லிங்கன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோலாலம்பூர், ஜனவரி 23 – மலேசியாவின் முதன்மை இலக்கவியல் தமிழ்ச் செய்தி நிறுவனமான வணக்கம் மலேசியா, நேற்று லிங்கன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், லிங்கன் பல்கலைக்கழகத்தில் Mass Communication எனும் மக்கள் தகவல் தொடர்பியல் துறையில் கற்கும் மாணவர்களுக்கு, வணக்கம் மலேசியா நிறுவனத்தில் பணிப்பயிற்சியை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம் மாணவர்களுக்குப் புதிய அனுபவத்தை அளித்து, தகவல் தொடர்பியல் துறையின் வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றும் என லிங்கன், பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் டத்தோ டாக்டர் Hafizah Che Hassan தெரிவித்தார்.

வணக்கம் மலேசியா மற்றும் லிங்கன் பல்கலைக்கழகத்தின் இந்த ஒப்பந்தம், மாணவர்களுக்கும் செய்தி துறைக்குமான ஒரு பாலமாக அமைந்து, அனுபவத்தோடும் கல்வியை செழுமைப்படுத்தும் புதியதொரு முயற்சியாக அமையும் என வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் முத்துசாமி தமதுரையில் தெரிவித்தார்.

வணக்கம் மலேசியா, பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து, தமிழ்ச் செய்தித் துறையை வளர்ச்சிப் பாதையில் அமைத்துள்ளது.

குறிப்பாக, தமிழ் செய்திகள் மட்டுமின்றி, தகவல் தொடர்பியல் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் பயிற்சி திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த வாய்ப்பு மாணவர்களைக் கல்வியில் மட்டுமின்றி நடைமுறை துறையிலும் திறமையாக உருவாக்க உதவும் என லிங்கன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் துறை இடைக்கால செயல்பாட்டுத் தலைமை பேராசரியர் டாக்டர் கார்த்திகேஸ் தெரிவித்தார்.

இதனிடையே, துறையின் தற்போதைய நிலையை அனுபவிக்க ஒரு விலையிட முடியாத அனுபவமாக இந்த பணிப்பயிற்சி அமையபெறும் என சமூக அறிவியல், கலை மற்றும் மனிதவியல் துறையின் தலைவர் பேராசியர் Manual Selvaraj Bexci மற்றும் துணை பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் தெரிவித்தனர்.

தங்கள் திறமைகளை மேம்படுத்தி, நேரடி செய்தி அனுபவத்தையும், தொழில்நுட்ப அறிவையும் அடைவதற்கான நல்வாய்ப்பாக இந்த ஒப்பந்தம் அமையும் என Mass Communication துறையின் மாணவர்கள் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், மாணவர்களுக்குத் துறை சார்ந்த அனுபவம் மட்டுமின்றி, மலேசியாவின் தமிழ் ஊடக வளர்ச்சிக்கும் புதிய மைல்கல்லாக அமைகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!