செலாயாங், நவம்பர்-11 – ஒரு வழக்கறிஞரை அவமானப்படுத்தியதாகக் கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டிலிருந்து இன்ஸ்பெக்டர் ஷீலா ஷேரன் ஸ்டீவன் விடுவிக்கப்பட்டு, வழக்கிலிருந்தே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவரான பி.தனேஸ்வரன் வழக்கைத் தொடருவதில்லை என முடிவு செய்ததால், சிலாங்கூர் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஷீலாவை விடுவித்தது.
வழக்கு விசாரணையின் முதல் நாளான இன்று முதல் சாட்சியாக இருந்திருக்க வேண்டிய தனேஷ்வரன், ஷீலா மீது தான் போலீஸ் புகார் எதுவும் செய்யாத நிலையில், எதற்காக சாட்சிப் பட்டியலில் தனது சேர்க்கப்பட்டதாக கேள்வி எழுப்பினார்.
கடைசியில் ஷீலாவை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிப்பதாக நீதிபதி அறிவித்ததாக, ஷீலாவின் வழக்கறிஞர் எம்.மனோகரன் சொன்னார்.
லான்ஸ் கார்ப்பரல் அந்தஸ்திலான ஒரு போலீஸ்காரரை இழிவுப்படுத்தியது, எம். செல்வகுமாரி என்பவருக்கு மிரட்டல் விடுத்தது என ஷீலா மீது இன்னும் 2 குற்றச்சாட்டுகள் எஞ்சியுள்ளன.
செலாயாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை அவை விசாரணைக்கு வருகின்றன.