
வான்கூவர், ஜனவரி-2 – கனடாவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படவிருந்த ஏர் இந்தியா AI186 விமானத்தின் விமானி, மதுபானம் அருந்திய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் 2 மணி நேரங்கள் தாமதமானது.
வான்கூவர் அனைத்துலக விமான நிலையத்தில் ‘breathalyzer’ மூச்சுக்காற்று சோதனையில் தோல்வியடைந்த அவ்விமானி உடனடியாக கைதுச் செய்யப்பட்டார்.
அவர் வியன்னா வழியாக புது டெல்லி செல்லும் போயிங் 777 விமானத்தை இயக்கவிருந்தார்.
மதுபான வாடை வீசியதை அடுத்து, duty-free பணியாளர்கள் விமானியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுப்பியதை அடுத்து அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பின்னர் மாற்று விமானி தலைமையில் பயணம் தொடர்ந்தது.
இது ஒரு கடுமையான விதிமீறல் என சாடிய கனடிய வான் போக்குவரத்துத் துறை, உடனடி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பில், பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கை பின்பற்றப்படும் எனவும், விமானி விசாரணை முடியும் வரை பணியிலிருந்து விலக்கப்படுவார் எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.



