Latestஉலகம்

வாஷிங்டன் தெருக்களில் அமெரிக்க தேசிய காவல் துருப்புக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்ல தொடங்குவர்

வாஷிங்டன் , ஆக 25 – குற்றச்செயல்களை துடைத்தொழிக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கொள்கையை அமல்படுத்தும் நடவடிக்கையாக வாஷிங்டன் தெருக்களில் ரோந்து செல்லும் அமெரிக்க தேசிய காவல்படை துருப்புக்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்வதற்கான அனுமதி அமலுக்கு வந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய காவல்படை துருப்புக்கள் M17 கைத்துப்பாக்கிகள் அல்லது M4 துப்பாக்கிகளை எடுத்துச் செல்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாஷிங்டன் தெருக்களில் குற்ற செயல்களை துடைத்தொழிக்க ,அதிபர் டிரம்ப் அவசரநிலையை அறிவித்த பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நூற்றுக்கணக்கான ஆயுதமற்ற தேசிய காவல்படை துருப்புக்கள் வாஷிங்டனின் தெருக்களில் உள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth  கடந்த வாரம் துருப்புக்கள் ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதித்தார். காவலரின் கூட்டுப் பணிக்குழு, அதன் பணியாளர்கள் கடைசி முயற்சியாகவும், உடனடி மரண அச்சுறுத்தல் அல்லது கடுமையான உடல் ரீதியான விளைவுக்கு பதிலளிக்கும் விதமாக மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்துவார்கள் என்று தெரிவித்தது.

இதனிடையே குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், ஜனநாயகக் கட்சியினரால் நிர்வகிக்கப்படும் மற்றொரு நகரத்தில் தலையிட்டு, Chicagoவிற்கு தனது குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகக் கூறியுள்ளார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை அவர் (Maryland ) மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியினரால் நிர்வகிக்கப்படும் மிகப் பெரிய நகரான Baltimoreரில் துருப்புக்களை அனுப்பும் சாத்தியத்தையும் பரிந்துரைத்தார்.

தற்காப்பு அமைச்சு சாத்தியமான நிலைப்பாட்டிற்கான ஆரம்பத் திட்டத்தை மேற்கொண்டதால், Chicagoவிற்கு துருப்புக்களை அனுப்ப டிரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மைத் தலைவர் Hakeem Jeffries தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!