![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/judge-gavel-court-orders-2.jpg)
கோத்தா பாரு, செப்டம்பர் 24 – கிளந்தானில், தனது திருமண வாழ்க்கையில் இடையூறு விளைவித்து, விவாகரத்திற்கு வழிவகுத்த நண்பரை, தொழிலாளி ஒருவர் பாராங் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், செஷ்ன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட 37 வயது மதிக்கத்தக்க அந்த தொழிலாளி, தாம் குற்றமற்றவர் என்று வாதிட்டுள்ளார்.
எனினும், குற்றவியல் சட்டத்தின் 326-யின் கீழ், ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தித் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இருவருக்குமான திருமணப் பந்தத்தில் தலையிட்டு, கடந்த வாரம் அது விவாகரத்து வரை வித்திட்டதால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது; ஆகையால், அந்த தொழிலாளிக்கு உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்குமாறு, அவர் தரப்பு வழக்கறிஞர் கோரிகையை முன்வைத்தார்.
இந்நிலையில், அந்த தொழிலாளி நாள் ஒன்றுக்கு 70 ரிங்கிட் மட்டுமே பணம் ஈட்டுகிறார் எனும் நிலையில், நீதிமன்றம் 10,000 ரிங்கிட் ஜாமினுக்கு அனுமதி வழங்கியது.