Latestஉலகம்

விவாகரத்து வழக்குகளால் நீதிமன்றத்திற்குச் செல்லும் பூசாரிகள்; இனி பெங்களூர் சோமேஸ்வரர் திருக்கோயிலில் திருமணங்களுக்குத் தடை

பெங்களுர், டிசம்பர் 9 – 12ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெங்களுர் சோமேஸ்வரர் கோயில், கடந்த சில ஆண்டுகளாக திருமணங்களுக்கு தடை விதித்து வந்த நிலையில், தற்போது வெளிப்படையாக அதன் காரணத்தை வெளியிட்டுள்ளது.

திருமணத்துக்குப் பிறகு விவாகரத்து கோரும் எண்ணிக்கை அதிகரிக்கின்றன, இதனால் திருமணத்திற்கான சாட்சி என்ற முறையில் ஆலய பூசாரிகள் பல முறை நீதிமன்றம் ஏறவுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆலயம் சந்தித்துவிட்டதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. ஆலயத்தில் ஆகம சேவை செய்வதை விட நீதிமன்றத்தில் செலவு செய்யும் நேரம் அதிகரிக்கிறது.

மேலும், வீட்டில் எதிர்ப்பாலோ ஓடி வந்த ஜோடிகள் போலி ஆவணங்கள் காட்டி திருமணம் செய்து, பின்னர் குடும்பத்தினர் புகார் கொடுப்பது போன்ற பிரச்சினைகளும் கோயிலின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதால், நிர்வாகம் இனி திருமணங்களை தற்காலிகமாக தடை என அறிவித்துள்ளது நிர்வாகம்.

ஆனால் பூஜைகள் மற்றும் பிற சடங்குகள் வழக்கம்போல நடைபெறும். தற்போதுள்ள நிலைமை சீராகி பின்பு, முடிவை மீண்டும் பரிசீலிக்கலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!