
நியூ யோர்க், ஜனவரி-16, SpaDex திட்டத்தின் கீழ் PSLV C60 ராக்கெட் மூலம் அனுப்பிய 2 செயற்கைக் கோள்களையும், இந்தியா வெற்றிகரமாக விண்ணில் இணைத்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு Target, Chaser ஆகிய 2 செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பெருமையுடன் அறிவித்துள்ளது.
தலா 220 கிலோ கிராம் எடை கொண்ட அவ்விரு செயற்கைக் கோள்களும் டிசம்பர் 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டன;
அவற்றை இணைக்க ஜனவரி முதல் வாரமே முயற்சி மேற்கொள்ளப்பட்டது;
எனினும் தொழில்நுட்பக் காரணங்களால் அது சில தடவை ஒத்தி வைக்கப்பட்டு, இன்று காலை மிகுந்த எச்சரிக்கையோடு இணைக்கப்பட்டது.
இதையடுத்து, விண்வெளியில் விண்கலன்களை இணைக்கும் docking தொழில்நுட்பத்தைத் தொட்ட நான்காவது நாடாக, இந்தியா சாதனைப் படைத்தது.
தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே இந்த docking தொழில்நுட்பம் உள்ளது.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’கனவுத் திட்டத்திற்கு, இந்த SpaDex docking தொழில்நுட்பம் முன்னோடியாக இருக்குமென இஸ்ரோ எதிர்பார்க்கிறது.