
ஷா ஆலாம், ஜனவரி-14-வீட்டில் விழுந்து இடுப்பு எலும்பு முறிந்து துன் Dr மகாதீர் மொஹமட் இன்னும் சிகிச்சையில் இருப்பதால், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான அவரின் RM 150 மில்லியன் அவதூறு வழக்கை, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜனவரி, பிப்ரவரி விசாரணைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
பின்னர் மகாதீரின் உடல் நலம் குறித்த ஆகக்கடைசி தகவல்களுக்காக மார்ச் 17 அன்று வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வரும் என நீதிபதி அறிவித்தார்.
“22 ஆண்டுகள் 22 மாதங்கள் பதவியில் இருந்த ஒருவர், தனக்கும் தனது வாரிசுகளுக்கும் சொத்துக்களைக் குவித்து, வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார்” என 2023 மார்ச் மாதம் பி.கே.ஆர் மாநாட்டில் அன்வார் பேசியிருந்தார்.
அன்வார் தம்மைத் தான் அப்படி குறிப்பிடுவதாகவும், இது ஓர் அவதூறான பேச்சு என்றும் கூறி மகாதீர் இவ்வழக்கைத் தொடுத்துள்ளார்.



