பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-2 – இரு போலீஸ்காரர்கள் வெளிநாட்டவரிடம் லஞ்சம் வாங்கியதாக வைரலாகியுள்ள வீடியோ தொடர்பில், பெட்டாலிங் ஜெயா போலீஸ் உள் விசாரணையை மேற்கொண்டுள்ளது.
நேற்று டெலிகிராமில் ‘Edisi Siasat’ என்ற குழுவில் அவ்வீடியா வெளியாகி, பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர், 2 வெளிநாட்டு ஆடவர்களை நிறுத்தி அவர்களிடமிருந்து லஞ்சம் வாங்குவதாக அந்த வீடியோவில் காட்டப்படுகிறது.
போலீஸ் படையின் நற்பெயரை சம்பந்தப்படுத்தியுள்ளதால், அவ்விவகாரத்தைக் கடுமையாகக் கருதுவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஷாருல் நிசாம் ஜாஃபார் (Sharul Nizam Ja’afar) கூறினார்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீஸ்காரர்களை தமது தரப்பு நிச்சயம் பாதுகாக்காது என்றும் அவர் திட்டவட்டமாக சொன்னார்.
சிலாங்கூர், சுங்கை வேயில் இரு போலீஸ்காரர்கள் இரு வெளிநாட்டு ஆடவர்களுடன் சந்தேகத்திற்குரிய வகையில் இருக்கும் வீடியோ முன்னதாக சமூக ஊடகங்களில்