
கோலாலம்பூர், டிச 2 – வெள்ளத்திற்குப் பிந்தைய பாதுகாப்பு சோதனைகள், நிலையற்ற பகுதிகளில் சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக KL Sentral- Hat Yai – KL Sentralலை இணைக்கும் MySawasdee ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 8 ஆம்தேதிவரை மற்றும் டிசம்பர் 12 முதல் 15 வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக (KTMB) எனப்படும் மலேயன் ரயில்வே பெர்ஹாட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதாவது, ரயில் எண் 1004 KL Sentral முதல் Hat yai மற்றும் 1005 Hat Yai முதல் KL Sentral வரையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், எந்தவொரு ரயில் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு, ரயில் தண்டவாளத்தின் பாதுகாப்பின் அளவை தீர்மானிக்க ரயில் உள்கட்டமைப்பு ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடுகளை நடத்தி வருவதாக தாய்லாந்து அதிகாரிகள் அறிவித்தனர்.
பாதிக்கப்பட்ட 837 பயணிகளில், 683 பயணிகள் இன்னும் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்யவில்லை.



