கோலாலம்பூர், மார்ச் 8 – வெள்ளத்தினால் மின் விநியோகம் பாதிக்கப்பட்ட 37 இடங்களில் மீண்டும் மின் விநியோகம் பெறப்பட்டதாக Tenaga Nasional வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அதே வேளையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மலேசிய கைவினை மேம்பாட்டு கழகம், Hotel Impiana KLCC மற்றும் Menara Perakகிலும் இன்னும் மின் விநியோகம் இணைக்கப்படவில்லை.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட துணை மின்விநியோக பகுதிகளை கடக்கும்போது கூடுதல் கவனத்தோடு இருக்கும்படி பொதுமக்களை Tenaga Nasional அறிவுறுத்தியிருக்கிறது. கோலாலம்பூரில் 40 துணை மின் நிலையங்களில் நேற்று தற்காலிகமாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது.