பைபோர்ட்டா, நவம்பர்-4 – ஸ்பெயினில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நலம் விசாரிக்கச் சென்ற அந்நாட்டு மன்னர் தம்பதியர் மீதும், அரசாங்க உயரதிகாரிகள் மீதும் மக்கள் சேற்றை வாரி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோபமடைந்த மக்கள், மன்னரைக் கொலைக்காரன் என்றும், அவரின் வருகை அவமானம் என்றும் கத்திக் கூச்சல் போட்டனர்.
எனினும் அதனால் கோபம் கொள்ளாத மன்னரும் மாகாராணியாரும், முகம் மற்றும் ஆடைகளில் சேற்றுக் கறைகளோடு மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
என்றாலும், மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து வெள்ளமேற்பட்ட மற்றப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் அரச குடும்பத்தின் திட்டம் இரத்துச் செய்யப்பட்டது.
வரலாறு காணாத வெள்ளத்திற்கு கிழக்கு ஸ்பெயினில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.