ஈப்போ, ஜன 2 வெள்ளத்தினால் பாதிக்கப்படும் எஸ் .பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் அந்தந்த மாநில கல்வித்துறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாண்டு தேர்வு எழுதும் அனைத்து 402,956 மாணவர்களுக்கு உதவும் கடப்பாட்டை கல்வி அமைச்சு கொண்டிருப்பதாக அதன் துணையமைச்சர் Wong Kah Woh தெரிவித்தார். வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடரால் எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் எவரும் தேர்வில் பங்கேற்காமல் இருந்துவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். இயற்கை பேரிடர் மட்டுமின்றி எந்தவொரு பிரச்சனை எதிர்நோக்கினாலும் எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணவர்கள் உடனடியாக மாநில கல்வித்துறையின் நடவடிக்கை அறைக்கு தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உதவுவதற்கு கல்வி அமைச்சு தயாராய் இருப்பதாக Wong Kah Woh கூறினர் .
பேரிடரில் பாதிக்கப்படும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வு மையத்திற்கு வருவதை உறுதிப்படுத்துவதற்கு அவர்களுக்காக Op Payung திட்டத்தின் கீழ் நடவடிக்கையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு வெள்ளம் மற்றும் இதர இயற்கை பெரிடர் நிகழ்ந்தால் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கை எடுப்பது குறித்து தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனமான Nadma மற்றும் Met Malaysia வானிலை நிறுவனத்துடன் கல்வி அமைச்சு ஒத்துழைத்து வருகிறது. Kampung Pasir Puteh தேசிய இடைநிலைப் பள்ளியில் முதல் நாள் எஸ்.பி.எம் தேர்வு எழுதும் மாணர்களை சந்தித்த பின் துணையமைச்சர் Wong Kah Woh இத்தகவலை வெளியிட்டார்.